தமிழ்நாடு

மழை காரணமாக டாப்சிலிப்பில் யானை சவாரி நிறுத்தம்

மகேஷ் குமார்

கஜா புயலைத் தொடர்ந்து டாப்சிலிப்பில் வியாழக்கிழமை இரவு முதல் மழை பெய்து வருவதால் யானை சவாரி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், டாப்சிலிப்பிற்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அதிக அளவில் வந்துசெல்கின்றனர். அங்கு நேற்று (வியாழக்கிழமை) இரவு முதல் தொடர் மழை பெய்துவருவதால் தற்காலிகமாக யானை சவாரி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

யானை சவாரிக்கு டாப்சிலிப் முகாம் யானைகளான மாரியப்பன், கல்பனா, பரணி, வெங்கடேஷ் உட்பட 5 யானைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் 4 பேர் பயணம் செய்ய ரூ.600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT