தமிழ்நாடு

தேசிய நூலக வார விழா: அண்ணாநகர் அரசு நூலகத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்

DIN


தேசிய நூலக வார விழாவையொட்டி சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழுவின் கீழ் செயல்பட்டு வரும் அண்ணாநகர் முழு நேர கிளை நூலகத்தில் புத்தகக் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் இளங்கோ சந்திரகுமார் தலைமை வகித்து கண்காட்சியை தொடங்கி வைத்துப் பேசியது: அண்ணாநகர் நூலகத்தில் போட்டித் தேர்வுக்காக படிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிப்பகத்துக்கு தினமும் 60 முதல் 80 பேர் வரை வந்து செல்கின்றனர். வாசகர்கள், மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வாசகர்கள், நூலக உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதை மேலும் அதிகரிப்பதற்காக வாரம்தோறும் சிறப்பு சொற்பொழிவுகள், குழந்தைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய நூலக வார விழாவையொட்டி தொடங்கப்பட்டுள்ள புத்தகக் கண்காட்சியில் சிறுவர் கதைகள், தலைவர்கள் வரலாறு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் முறை ஆகியவை உள்பட பல்வேறு தலைப்புகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை அண்ணாநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த வாசகர்கள் படித்து பயன்பெற வேண்டும். மேலும் நூலகத்தின் மேம்பாட்டுக்கு புரவலர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். 
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக ஆய்வாளர் கோ.ரவி, ஓய்வு பெற்ற வருமான வரித் துறை அலுவலர் தியாகராஜன், நூலகர் சு.ரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வரும் திங்கள்கிழமை வரை காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT