முகப்பு
தமிழ்நாடு

நிவாரணப் பணிகளில் தாமதம் என்றால் உடனடி நடவடிக்கை: வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்   

கஜா புயல் நிவாரணப் பணிகளில் தாமதம் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.   

Updated On : 18 நவம்பர், 2018 at 5:48 PM
பகிர்:

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளில் தாமதம் குறித்து தகவல் அளித்தால் உடனடியாக  நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தகவல் தெரிவித்துள்ளார்.   

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறியதாவது:

கஜா புயல் பாதிப்புக்களான மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 முகாம்களில் 2,49,083 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். புயலால் இந்த அளவிற்கு சேதம் ஏற்படும் என கணிக்க இயலவில்லை. நிவாரணப் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 
 
பல்வேறு துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரவும் பகலுமாக நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் மீட்புப் பணிகளுக்கு பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும். 

Advertisement

நடைபெற்று வரும் நிவாரணப் பணிகளில் ஏதாவது தாமதம் என்றால் உடனே தகவல் அளியுங்கள். அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.