தமிழ்நாடு

ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் இல்லை: தமிழக அரசு பதில் மனு

DIN

ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், இதனை தடை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், "பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலமாகவும், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மருந்துகள் விற்பனை செய்வது சட்டவிரோதம். ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்துப் பொருள்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு போலியான, தவறான மற்றும் காலவதியான மருந்துகள் விற்பனைச் செய்யப்படும். சரியான மருந்து கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள். சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி மருந்து விற்பனை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, இந்த விற்பனையை சட்ட விரோதம் என அறிவித்து, வழக்கு முடியும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முறையான உரிமம் மட்டும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்து பொருள்களை விற்பனைச் செய்யத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "மருந்து பொருள்கள் கட்டுப்பாட்டு சட்டம் மத்திய அரசின் வரம்புக்கு உட்பட்டது. எனவே, ஆன்லைனில் மருந்து பொருள்களை விற்பனைச் செய்யத் தடை விதிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 5 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பைஞ்ஞீலியில் வரலாற்று நிகழ்வு: அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT