தமிழ்நாடு

தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி

DIN

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த விவகாரத்தில் டிடிவி தினகரன் தரப்பு ஆதரவாளரும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்து அரசு தலைமை வழக்குரைஞர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையிலிருந்து டிடிவி தினகரன் தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதி நீக்கத்தை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த  அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். இந்தத் தீர்ப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தையும், தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியையும் விமர்சித்த தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்ரீமதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தார். 
இந்த விவகாரம் தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் நோட்டீஸ் பிறப்பித்திருந்தார். அதன்படி ஆஜரான தங்க தமிழ்ச்செல்வன் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்த தனது செயல்பாட்டுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும், தன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த நிலையில், திங்கள்கிழமையன்று அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்த தங்க தமிழ்ச்செல்வன் மீது மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்து உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடிக்கு எதிரான புகார்: 1 வாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் பதிலளிக்கப்படும் -பாஜக

பிகாரில் கார்-லாரி மோதல்: 6 பேர் பலி!

கோவை தோ்தல் முடிவை வெளியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

SCROLL FOR NEXT