தமிழ்நாடு

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரை தாக்கி ரூ.9 லட்சம் கொள்ளை

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 9.50 லட்சம் பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடித்துச் சென்றது.

ENS

திருப்பூரில் மருத்து கடை உரிமையாளரைத் தாக்கி ரூ. 9.50 லட்சம் பணத்தை 4 பேர் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை கொள்ளையடித்துச் சென்றது.

இதுதொடர்பாக மங்கலம் பகுதி பேலீஸார் தெரிவித்ததாவது, திருப்பூர் பாரதிபுரம் பகுதியில் இடுவையைச் சேர்ந்த எஸ்.கேசவன் (28) என்பவர் கனியம்பூண்டி எனுமிடத்தில் மருந்துக் கடை நடத்தி வந்துள்ளார். மேலும் அங்கு பணப் பரிவர்த்தனை நிலையமும் நடத்தி வந்துள்ளார். 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் இரவு கடையடைத்துவிட்டு கேசவன் வீடு திரும்பும்போது, 4 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்து வந்து பாரதிபுரம் பகுதியை கடந்தவுடன் இரும்புக் கம்பியால் தலை மற்றும் கைப் பகுதிகளில் பலமாகத் தாக்கி அவரிடம் இருந்த ரூ. 9.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றுவிட்டனர். 

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கேசவனுக்கு நெருக்கமானவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT