தமிழ்நாடு

பேருந்து கவிழ்ந்து சின்னத்திரை நடிகர் சாவு; 21 பேர் காயம்

தினமணி

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை தனியார் சொகுசுப்பேருந்து கவிழ்ந்ததில், சின்னத்திரை நடிகர் மதன்ராஜ் (30) உயிரிழந்தார். மேலும் 21 பேர் காயமடைந்தனர்.
 சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் மதுரை பகுதியைச் சேர்ந்த 25 பேர் பயணம் செய்தனர். கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் சின்னத்திரை நடிகர் மதன்ராஜ், கெüதம் (26), கோபி (26), சுரேஷ்குமார் (35), ராம்மோகன் (56), நர்த்தனா (19), ஷிபா (12) உள்ளிட்ட 21 பேர் காயமடைந்தனர்.
 இதில் பலத்த காயமடைந்த மதன்ராஜ் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 12 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். உயிரிழந்த மதன்ராஜ் மதுரை அருகே உள்ள சமயநல்லூரைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான இவர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். சென்னையில் தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
 மேலூர் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT