தமிழ்நாடு

ஒன்று முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சீருடை மாற்றம்

DIN


அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, வரும் 2019 -20 -ஆம் கல்வியாண்டில் புதிய வண்ணச் சீருடைகள் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் வகுப்புகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
அரசுப் பள்ளிகளில் முதல்கட்டமாக 5 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வரும் நவம்பர் மாதத்துக்குள் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சீருடை மாற்றப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக பல வண்ணங்களில் சீருடை மாற்றம் செய்யப்பட உள்ளது.  2019-20 கல்வியாண்டு முதல் இந்த சீருடை மாற்றம் அமலுக்கு வரும். மாணவர்களுக்கு 4 செட் விலையில்லா சீருடைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
புதிய வண்ணச் சீருடை: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு 2018-19 -ஆம் கல்வியாண்டில் சீருடை மாற்றம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து வரும் 2019-20-ஆம் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சீருடை மாற்றப்பட உள்ளது.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை பச்சை நிற அரைகால் சட்டையும், இளம்பச்சை நிறக் கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்பட உள்ளது.
இதேபோல் 6 - ஆம் வகுப்பு முதல் 8 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பழுப்பு நிற முழுக்கால் சட்டையும், பழுப்பு நிறத்தால் ஆன கோடிட்ட மேல் சட்டையும் சீருடையாக வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT