தமிழ்நாடு

மாநில அரசும் மனது வைத்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறையும்; செய்வார்களா?  

DIN

சென்னை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையில் குறைப்பு செய்துள்ளது போன்று, மாநில அரசும் முயற்சி செய்தால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறையும் வாய்ப்புப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சரக்கு வாகனங்களுக்கான வாடகை அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் தில்லியில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி வியாழனன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மத்திய அரசானது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது கலால் வரியில் இருந்து ரூ. 1.50 குறைத்துக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது. 

அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது லாபத்திலிருந்து ரூ. 1 குறைத்துக் கொள்வதென்று முடிவு செய்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது லிட்டருக்கு ரூ. 2.50 குறையும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.  பிரதமர் மோடியின் தலையீட்டின் பெயரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.  

மத்திய அரசின் இந்த முயற்சியின் காரணமாக பெட்ரோல் டீசல் விலையானது வியாழன் நள்ளிரவு முதல் ரூ. 2.50 குறைகிறது. இது போலவே மாநில அரசும் பெட்ரோல் டீசல் மீதான மாநில அரசின் வரிகளை ரூ.2.50 அளவில் குறைக்குமானால், விலை ரூ. 5 குறையும். இதன் மூலம் லட்சக்கணக்கானோர் பயன்பெறுவார்கள். 

அத்தகைய நடவடிக்கையை மாநில அரசு எடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT