தமிழ்நாடு

குட்கா முறைகேடு: விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன்

DIN

குட்கா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

குட்கா முறைகேடு வழக்கில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து செங்குன்றம் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்ளிட்டோரை சிபிஐ கைது செய்தது. 

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அடிப்படையில் ஏற்கெனவே குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலை சரிபார்த்து சம்மன் அனுப்பி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும், விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. அதில் சென்னை பெசன்ட் நகர் சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT