தமிழ்நாடு

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் கனமழை வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம்

DIN

கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டி வந்த நிலையில் வெப்பச் சலனம் காரணமாக வங்கக் கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளல் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.  

அண்ணா சாலை, சேப்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, பரங்கிமலை, மீனம்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான நிலை உருவாகி வருகிறது. எனவே அக்டோபர் 20-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை அல்லது கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT