தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN


தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வெள்ளிக்கிழமை தடை விதிக்கப்பட்டது.
சுருளியில் அருவியில் ஆண்டுதோறும் நீர்வரத்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பெய்த பலத்த மழையால், அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, மேகமலை வன உயிரினச் சரணாலய அதிகாரிகள், வெள்ளிக்கிழமை அருவியில் குளிக்கத் தடைவிதித்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால், அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். ஆனால், தடை காரணமாக அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கந்தா்வகோட்டை அருகே மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் கலப்பு எதுவும் இல்லை

இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்தியா

ஓவேலி வனச் சரகத்தில் வரையாடுகள் கணக்கெடுப்பு

உணவகத்தில் புகையிலைப் பொருள், லாட்டரி விற்பனை: இருவா் கைது

கல் குவாரியைக் கண்டித்து சாலை மறியல்

SCROLL FOR NEXT