தமிழ்நாடு

மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை இசை வழிபாடு

DIN

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் நவராத்திரி விழாவில் விஜய தசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 108 வீணை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோயிலில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வீணை இசை வழிபாட்டு மன்றம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தனியார் இசைக் கல்லூரி முதல்வர் மல்லிகா தலைமையில் இசைப் பேராசிரியர்கள், மாணவியர் கலந்துகொண்டு ஒரு சேர வீணையை மீட்டி இசை எழுப்பினர். இந்த நிகழ்ச்சியை பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மதுரை மாவட்ட ஆட்சியர் ச.நடராஜன் நிகழ்ச்சியை பார்த்து, அதில் பங்கேற்றவர்களைப் பாராட்டினார். 
முன்னதாக கோயில் சார்பில் நடைபெற்ற நவராத்திரி கொலு நிகழ்ச்சியில் அம்மன் வீணையுடன் விஜயதசமி திருக்கோலத்தில் அருள்பாலித்தார். முன்னதாக காலையில் நவராத்திரி கலை நிகழ்ச்சிகள் பக்திச் சொற்பொழிவுடன் தொடங்கின. பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உச்சிக்கால பூஜை வேளையில் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி ராணி மங்கம்மாள் மண்டபத்தில் அருள்பாலித்தார். மாலையில் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் சுற்றிவந்து அருள்பாலித்தார். அதன் பின்னர் கோயிலில் வீணை இசை நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து குச்சிப்பிடி நடனம், புல்லாங்குழல் தமிழிசை, ஆன்மிக உரை ஆகியவையும் நடைபெற்றன. விஜயதசமியை முன்னிட்டு கோயிலில் உள்ள சரஸ்வதி, மகாலட்சுமி சன்னதிகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பள்ளிக்குழந்தைகள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT