தமிழ்நாடு

வடகிழக்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்க வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

DIN


சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை ஒரு வார காலம் தாமதமாகத் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை துவங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றும், அக்டோபர் 26ம்  தேதிக்கு மேல் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் பலத்த மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரியகுளத்தில் 16 செ.மீ. மழையும், பெரியநாயக்கன்பாளையத்தில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT