முகப்பு
தமிழ்நாடு

சொத்து வரி உயர்வு: அக்.29- இல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் சொத்து வரி உயர்வை எதிர்த்து அக்டோபர் 29-ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்

Updated On : 23 அக்டோபர், 2018 at 2:06 AM
பகிர்:


தமிழக அரசின் சொத்து வரி உயர்வை எதிர்த்து அக்டோபர் 29-ஆம் தேதி மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
ராஜபாளையத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக அரசு அறிவித்துள்ள சொத்து வரி உயர்வை எதிர்த்து தமிழக அளவில் வருகிற அக்டோபர் 29-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு 100 சதவிகிதமும், குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதமும் வரி உயர்த்தப் பட்டுள்ளது. 
பல்வேறு வரிகள் மற்றும் பெட்ரோல் விலை உயர்வால் பாதிப்படைந்துள்ள மக்கள் தற்போது இந்த சொத்துவரி உயர்வால் பாதிக்கப் படுவார்கள். மேலும் சொத்து வரி உயர்வு குறித்து பொதுமக்களிடையே எந்த கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப் படவில்லை. வரி உயர்வு என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் முடிவு செய்ய வேண்டும். அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்கும் லோக்பால் கமிட்டி இன்று வரை அமைக்கப் படவில்லை. 
2019 மக்களவைத் தேர்தலில் பாஜக எதிர்ப்புக் கூட்டணியை உருவாக்கி, அக்கட்சியைத் தோற்கடிப்போம். இடது சாரி கட்சிகளின் பலத்தை அதிகரிப்போம். மத சார்பற்ற கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்குவோம் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.