பேராசிரியர் காலிப் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும்
அரசு கல்லூரிகளில் உள்ள 3,000-த்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
அரசு கல்லூரிகளில் உள்ள 3,000-த்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு கல்லூரிகளில் சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெருநகரம் முதல் கிராமம் வரை உள்ள ஏழை, எளிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிக்குச் சென்று படிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர்.
அதனால், அரசு கல்லூரிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், கெளரவ விரிவுரையாளர்களாக அரசு கல்லூரிகளில் உள்ள 4,300 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.