முகப்பு
தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயிலில் முதல்வர் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

Updated On : 23 அக்டோபர், 2018 at 2:41 AM
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு திங்கள்கிழமை வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரணகும்ப மரியாதை. 
பகிர்:


ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் தமிழக முதல்வர் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வகையில், திருச்சியில் தங்கியிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, திங்கள்கிழமை காலை 7.15 மணியளவில் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்தார். 
திருக்கோயிலுக்கு வந்த தமிழக முதல்வருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து, பெருமாள் சன்னிதி, தாயார் சன்னிதி, கருடாழ்வார் உள்ளிட்ட பல்வேறு சன்னிதிகளில் தரிசனம் செய்த முதல்வர், 8.25 மணியளவில் புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார். 
புதுக்கோட்டையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சி வந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.