தமிழ்நாடு

கோயில் வளாகங்களில் உரிமம் முடிந்த கடைகளை அகற்றுக: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

DIN


மதுரை: கோயில் வளாகங்கள் மற்றும்  கோயில் நிலத்தில் உள்ள உரிமக் காலம் முடிந்த கடைகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை, கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், உரிம காலம் முடிந்த கடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த மதுரைக் கிளை, கந்த சஷ்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் அடிப்படை வசதிகளை செய்து  தர வேண்டும் என்றும், கோயில்களின் சொத்து விவரங்களை அந்தந்த  கோயில்களில் விளம்பர பலகையில் வைக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், உரிமக் காலம் முடிந்த கடைகளை உடனடியாக அகற்றுமாறும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT