தமிழ்நாடு

தமிழகத்தில் நடப்பாண்டில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு 16 பேர் உயிரிழப்பு: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

DIN

சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, 

வீடு மற்றும் பொது இடங்களில் தண்ணீர்  தேங்குவதை தடுக்க வேண்டும். காலி இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டெங்குவால் கர்ப்பிணிகள், பச்சிளங் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தங்களுக்கு ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை அலட்சியப்படுத்தக் கூடாது. காய்ச்சல் வந்தவுடன் சிகிச்சை பெற வேண்டும்.  தமிழகத்தில் இந்த வருடம் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் மற்றும் பன்றி காய்ச்சலுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

காய்ச்சலுக்கு போலியான மருந்து வழங்கிய 840 பேர் பிடிபட்டுள்ளனர். டெங்கு போன்ற காய்ச்சல் பாதிப்பினை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து தனியார் மருத்துவர்களுக்கு செவ்வாய்கிழமை ஆலோசனை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT