தமிழ்நாடு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 20% போனஸ்: முதல்வர் பழனிசாமி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  முதல்வர் பழனிசாமி 20% போனஸ் அறிவித்துள்ளார்.

DIN


சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு  முதல்வர் பழனிசாமி 20% போனஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தீபாவளித் திருநாளை சிறப்புடன் கொண்டாடிட ஏதுவாக, இந்த ஆண்டிற்கான (2017-18) போனஸ் மற்றும் கருணைத் தொகையினை வழங்கிட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 45 தொழிலாளர்கள் (6,416 பதிலி பணியாளர்கள் உட்பட) மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை ஆக மொத்தம் 20 விழுக்காடு வழங்கிட  தமிழக அரசு 215 கோடியே 99 இலட்சம் ரூபாயினை ஒதுக்கியுள்ளது.

மேலும், தொடர்ந்து வரும் டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினத்தினை ஈடுசெய்கின்ற வகையில், அரசின் சார்பில் வழங்கப்பட்டு வந்த மானியத்தினை மாதந்தோறும் தொடர்ந்து வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், கடந்த 20.01.2018 முதல் 30.09.2018 வரையிலான காலத்திற்கு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினை ஈடுசெய்யும் பொருட்டு 198 கோடியே 66 இலட்சம் ரூபாயினை மானியமாக இந்த அரசு வழங்கியுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள் தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியினை சந்தித்து வருவதால், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் பணப் பயன்களை வழங்கிட இயலாத நிலையிலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில் கடந்த டிசம்பர்-2017 முதல் மார்ச்-2018 வரையில், நிலுவையிலுள்ள பணப்பயன்களை வழங்கிடும் பொருட்டு, 251 கோடியே 2 இலட்சம் ரூபாயினையும், தொழிலாளர்களின் நலன்களில் மிகுந்த அக்கறை கொண்ட தமிழக அரசு வழங்கியுள்ளது.

இதன் பயனாக, 1,113 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதியும், 1,576 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடையும், 1,837 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஈட்டியவிடுப்பு தொகையும், 714 ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையும் வழங்கப்படுவதோடு, புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 118 ஓய்வுபெற்ற பயனாளிகளும் பயன்பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி பாரடைஸ் ஃபர்ஸ்ட் சிங்கிள் விடியோ!

நாளை சென்னை வருகிறார் ஞானேஷ்குமார்?

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை : மருத்துவமனை தகவல்

ஃபர்ஹான் அதிரடி: இங்கிலாந்துக்கு 165 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!

சென்னைக்கு 16 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்!

SCROLL FOR NEXT