காய்ச்சல் வந்த மதகுகள்; கோமா நிலையில் அரசு: சகட்டுமேனிக்கு கிண்டலடிக்கும் ஸ்டாலின்
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு அணையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட முக்கொம்பு அணையை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டார்.
திருச்சி முக்கொம்பு மேலணையில் வெள்ளத்தால் உடைந்த மதகுகளையும், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளையும் நேரில் பார்வையிட்ட ஸ்டாலின், சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவோரிடம் நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முக்கொம்பு பகுதியை நேரில் ஆய்வு செய்ய வந்த முதல்வர் பழனிசாமி, காய்ச்சல் சொல்லிக் கொண்டு வருவது இல்லை. அதுபோலத்தான் மதகும் உடைந்துவிட்டது என்று மிக அறிவுப்பூர்வமான கருத்தைக் கூறினார். ரோம் நகரம் தீப்பிடித்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனின் வாரிசு போல் முதல்வர் பேசி உள்ளார்.
Advertisement
கோமா நிலையில்தான் தமிழகத்தில் இன்றைய ஆட்சி இருக்கிறது. கால்வாய்கள் தூர்வாரப்படுவதை விட, கமிஷன் பணம்தான் தூர்வாரப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
மேலும் தனது ஆய்வுப் பயணம் குறித்து டிவிட்டரில் ஸ்டாலின் கூறியிருப்பதாவது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன்! கமிஷனும் - ஊழலும் நிறைந்து, இன்றைக்கு “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு இதனை சரிசெய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.