கருப்புசாமி, கரசாமி யாருக்கு வெற்றி?
கர, கருப்பு திரைப்படம் குறித்து...
நடிகர்கள் சூர்யா, தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன.
2026-ல் இதுவரை தமிழ் சினிமாவிற்கு பெரிய நடிகர்களிடமிருந்து ஹிட் படங்கள் வரவில்லை. இந்தாண்டு ஆரம்பத்திலிருந்து நட்சத்திர நடிகர்களான சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் நடித்த பராசக்தி, எல்ஐகே திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்று வணிக ரீதியாக கடுமையாக பாதிப்புகளைச் சந்தித்தது.
பொங்கல் வெளியீட்டிலிருந்து விலகிய ஜன நாயகன் இன்று வரை வெளியாகாமல் இருக்கிறது. திரைக்கு வருவதற்கு முன்பே இணையத்தில் கசிந்து சுமாரான படம் என்றே விமர்சனங்கள் வந்தன. திரையரங்குகளில் வெளியானால் வணிக பாதிப்பு இருக்காது என்றாலும் ஹிட் படமாக அமையாது.
Advertisement
Advertisement
அந்தக் குறையை கர, கருப்பு ஆகிய திரைப்படங்கள் போக்குமா? என ரசிகர்களிடமும் திரைப்பட விமர்சகர்களிடமும் ஆர்வம் எழுந்துள்ளது.
இதில், கர நாளையும் (ஏப். 30) கருப்பு வருகிற மே 14 ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. இரண்டு படங்களுக்குமே நல்ல எதிர்பார்ப்பு இருப்பதுடன் இதன் இயக்குநர்களான விக்னேஷ் ராஜா, ஆர்ஜே பாலாஜியின் நேர்காணல் பேச்சைக் கணக்கிட்டால் இரண்டும் சொதப்பாத படங்களாவே இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
கரசாமி, கருப்புசாமி என ஆபத்திலிருக்கும் தன் மக்களைக் காக்கும் சாமிகளாகவே தனுஷும், சூர்யாவும் நடித்துள்ளனர். எந்த சாமியின் ஆட்டம் உக்கிரமாக இருக்கும் என்பதைக் காத்திருந்து காண வேண்டியதுதான்!
Films starring actors Suriya and Dhanush are being released consecutively.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.