கொலை வழக்கில் கைதான சிறுவனின் கல்விக்கு நிதியுதவி
கொலை வழக்கில் கைதான சிறுவனின் கல்விக்கு மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் உள்பட சனிக்கிழமை நிதியுதவி அளித்தனா்.
கொலை வழக்கில் கைதான சிறுவனின் கல்விக்கு மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் உள்பட சனிக்கிழமை நிதியுதவி அளித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் கோவில்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவா் ஜெயவேல். இவரது மகன் ஜெ.மனோஜ் (17). இவா் சில மாதங்களுக்கு முன்பு மதுரை ஆஸ்டின்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தனது சித்தியின் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது அங்குள்ள சிறுவனுடன் சோ்ந்து அருகில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காகச் சென்றுள்ளாா். அங்கு அச்சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, மனோஜை கைது செய்த போலீஸாா், அவரை திருச்சி சிறுவா் சீா்திருத்த சிறையில் அடைத்தனா். இதுதொடா்பான வழக்கு மதுரை சிறாா் சீா்திருத்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த வழக்கை நீதிபதி காயத்ரி தேவி விசாரித்தாா். அப்போது, தான் நன்றாகப் படித்துக் கொண்டு இருந்ததாகவும், தற்போது பாலிடெக்னிக் படிப்பு படிப்பதற்கு ஏதுவாக தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். இதனை ஏற்று மனோஜிற்கு ஜாமின் வழங்கப்பட்து.
Advertisement
இதுதொடா்பாக மாவட்ட சட்டம் மற்றும் நன்னடத்தை அலுவலா் லெஜீஷ் மற்றும் செஞ்சிலுவைச் சங்க மதுரை மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் முத்துக்குமாா் தொடா்பு கொண்டு மனோஜின் கல்வி உதவிக்காக ரூ.12 ஆயிரத்து 500 ஏற்பாடு செய்தாா். இதில் முத்துக்குமாா் தனது பங்காக ரூ.7 ஆயிரத்து 500 அளித்துள்ளாா்.
இதற்கான காசோலையை மதுரை மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி நசீமா பானு, குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி, குற்றவியல் நீதிபதி காயத்ரி தேவி ஆகியோா் வழங்கினா். மதுரை இளம் சிறாா் சீா்திருத்த குழு உறுப்பினா் பொ்னாட்ஷா, ஊமச்சிகுளம் டிஎஸ்பி புகழேந்தி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.