முகப்பு
தமிழ்நாடு

நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை

திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:32 AM
திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:


திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முதல்வர் பழனிசாமி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலாவதாக காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகளுடன் தனது ஆலோசனையை அவர் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, நாளொன்றுக்கு நான்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசித்து வருகிறார்.
அந்த வகையில், திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர் ஆகிய நான்கு மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் அவர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரம், விதைகள் விநியோகம், பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தங்குதடையின்றி அத்தியாவசியப் பொருள்கள் வழங்குதல், குடிமராமத்துப் பணிகள், ஊராட்சி-நகராட்சிப் பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் செய்தல், தெருவிளக்கு, சாலை, கழிப்பறை, சுகாதார வசதிகள், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
மேலும், முதியோர் ஓய்வூதியத் திட்டம், பட்டா மாறுதல், ஏழை-எளியோருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மழைக் காலங்களில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளுதல், சத்துணவு மையங்களில் உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.