முகப்பு
தமிழ்நாடு

மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை:  மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 11:29 AM
பகிர்:


சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை மெரினாவில் போராட்டம் நடத்த தனி நீதிபதி அனுமதி அளித்துப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கோரி அய்யாகண்ணு தொடர்ந்த வழக்கில், அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இரு தரப்பு வாதங்களையும் கேட்டு இன்று தீர்ப்பளித்தது.

அதில், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே மெரினா கடற்கரைப் பகுதியில் சட்டம் ஒழுங்கைக் காக்க தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கையானது சரியே என்று தீர்ப்பளித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.