தமிழ்நாடு

ரஷியாவின் ராட்சத சரக்கு விமானம் சென்னை வருகை

DIN


சென்னை விமான நிலையத்துக்கு, ரஷியாவின் ஓல்கா நெஃபர் விமான நிறுவனத்தின் ஏ.என்-124 என்ற ஆண்டனோ-124-எப். ரக ராட்சத சரக்கு விமானம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தது.
இதுகுறித்து இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை விமான நிலையத்துக்கு, ரஷியாவின் ஓல்கா நெஃபர் விமான நிறுவனத்தின் ஏ.என்-124 என்ற ஆண்டனோ-124-எப். ரக பிரமாண்ட சரக்கு விமானம் ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தது. 
மிக அகலமான பரப்பளவைக் கொண்ட இந்த ராட்சத விமானம் சீனாவின் ஸியான் ஸியான்யாங் விமான நிலையத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்தது. இந்த சரக்கு விமானத்தில் தொழிற்சாலைக்கு தேவையான 53.46 டன் எடையுள்ள இயந்திரங்கள் உள்ளிட்ட சரக்குகள் 13 டிரக்குகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.
அண்மைகாலங்களில் சென்னை விமான நிலையத்துக்கு ஏ.என்-124 விமானம் ஒன்று கணிசமான அளவு சரக்குகளுடன் வருவது இதுவே முதன்முறை. 
சென்னை விமான நிலையம் தென்னிந்தியாவின் முக்கிய நுழைவாயிலாகத் திகழ்வதால், எதிர்காலத்தில் இதுபோன்ற அதிக சரக்குகளை ஏற்றிவரும் விமானங்கள் அடிக்கடி வரும் என இந்த விமானத்தின் வருகையை அடுத்து எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ராட்சத விமானம் தற்போது சென்னை விமான நிலையத்தின் 104-ஆம் எண் முனையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மீண்டும் செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணிக்கு சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கிறது. படைவீரர்கள், இயந்திர தளவாடங்கள் உள்ளிட்ட அதிக எடையுள்ள பிரமாண்டமான வடிவிலான சரக்குகளை நீண்ட தூரம் ஏற்றிச் செல்ல வகையிலான இந்த விமானம் 150 மெட்ரிக் டன் எடையுள்ள சரக்குகளை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விமானம் 69.1 மீட்டர் நீளமும், 73.3 மீட்டர் நீளமுள்ள இறக்கை பகுதியுடன் கூடியது ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT