தமிழ்நாடு

உதவிப் பேராசிரியர் பணி நியமனம்: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN


அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை உதவிப் பேராசிரியர் பணி நியமனத்தில் வயது நிர்ணயம் தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் பி.சுரேஷ்குமார், சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட 6 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு, கடந்த 2014 -15 மற்றும் 2015- 16 ஆம் கல்வியாண்டுகளில் மருத்துவ மேற்படிப்பை முடித்துவிட்டு, மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது பணியாற்றி வருகின்றோம். மருத்துவ மேற்படிப்பை முடித்தவுடன் எங்களுக்கு முதுநிலை உதவிப் பேராசிரியராகப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில் மருத்துவக் கல்லூரிகளின் ஆசிரியர்கள் நியமன விதிகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. அதில், இந்த பதவிக்கு அதிகபட்ச வயது 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விதியை திரும்பப்பெறக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. எனவே, இதனை திரும்பப் பெறவும், விதிகள் திருத்தத்துக்கு தடை விதிப்பதுடன், அதனை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் எனக் கோரினார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 19 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT