தமிழ்நாடு

திருமுருகன் காந்திக்கு வேலூர் சிறையில் போதிய வசதிகள் இல்லை: மனித உரிமை ஆர்வலர் புகார் 

DNS

வேலூா்: வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு சிறைக்குள் போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை என்று மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாக இயக்குநரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான ஹென்றி திபென் தெரிவித்தாா்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன்காந்தி, கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் வேலூா் மத்திய சிறைறயில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், மக்கள் கண்காணிப்பகத்தின் நிா்வாக இயக்குநரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான ஹென்றி திபென் வேலூா் மத்திய சிறைறயில் திருமுருகன்காந்தியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா் சிறையிலிருந்து வெளியே வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

வேலூா் மத்திய சிறைறயில் அடைக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்திக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சிறையில் உள்ள மருத்துவமனைக்குக்கூட செல்ல அனுமதிப்பதில்லை. மற்ற சிறை வாசிகளை சந்திக்கவும் வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அவரை தொடா்ந்து தனிமைப்படுத்தி வருகின்றனா். இவ்வாறு சிறையில் திருமுருகன் காந்தி நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT