தமிழ்நாடு

உதகை-கேத்தி இடையே சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கம்

தினமணி

இந்திய ரயில்வே துறையின் 2 வார சுற்றுலாக் கொண்டாட்டங்களையொட்டி, நீலகிரி மலை ரயிலைப் பெருமைப்படுத்தும் வகையில் உதகையில் இருந்து கேத்திக்கு சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது.
 இந்திய சுற்றுலாவின் 15 நாள் ஆண்டு விடுமுறைக் கொண்டாட்டங்களையொட்டி நாடு முழுதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், நீலகிரி மலை ரயிலைப் பெருமைப்படுத்தும் வகையில் செப்டம்பர் 16ஆம் தேதியும், 23ஆம் தேதியும் (ஞாயிற்றுக்கிழமைகளில்) உதகையிலிருந்து கேத்திக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, உதகையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கேத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து உதகை வந்தடைந்தது. மீண்டும் பிற்பகல் 2. 30 மணிக்கு உதகையில் இருந்து கேத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இந்த ரயில் மாலை 4 மணிக்கு உதகை திரும்பி வந்தது. வரும் 23 ஆம் தேதியும் உதகையிலிருந்து கேத்திக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT