தமிழ்நாடு

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல்: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சம்: துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைப்பு

தினமணி

இலங்கை கடற்படையினர் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல அச்சப்பட்டு படகுகளை துறைமுகத்திலேயே நிறுத்தி வைத்துள்ளனர். 
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் 850 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும்  மீன்பிடித் தொழிலை நம்பி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சார்புத் தொழிலாளர்கள் உள்ளனர். இலங்கை கடற்படையினர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் மீனவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் 7-க்கும் மேற்பட்ட கப்பல்களை எல்லையில் நிறுத்தியுள்ளனர்.
 இதனால் ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 கடலுக்கு செல்லாததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். 
இதனால் ராமேசுவரம் மீன்பிடித்துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை ஏராளமான விசைப்படகுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 
பெரும்பாலான மீனவர்கள் அண்டை மாநிலங்களுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர். மீனவர்களின் வாழ்வாதார பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT