தமிழ்நாடு

பெண் சார்பு ஆய்வாளருக்கு, ரூ.5 லட்சம் இழப்பீடு: மனித உரிமைகள் ஆணைய உத்தரவுக்கு தடை

DIN


சிவகங்கையில் பெண் சார்பு ஆய்வாளருக்கு தலைமை காவலர் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மானாமதுரை செந்தாமரைக் கண்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: 
சிவகங்கை மாவட்டத்தில் 2009-இல் தலைமை காவலராக பணியாற்றியபோது மானாமதுரைசார்பு ஆய்வாளர் நர்மதாவுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனித உரிமைகள் ஆணையத்திடம் நர்மதா புகார் அளித்தார். செந்தாமரைக் கண்ணன் மற்றும் எஸ்.பி. ராஜசேகரன் ஆகியோர் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட சார்பு ஆய்வாளர் நர்மதாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டும். இந்தத் தொகையை செந்தாமரைக் கண்ணனிடம் இருந்து ரூ.3 லட்சம், எஸ்.பி. ராஜசேகரனிடம் இருந்து ரூ.2 லட்சம் என வசூல் செய்து கொள்ள வேண்டும். மேலும் செந்தாமரைக்கண்ணனை பணி நீக்கம் செய்ய வேண்டும். நர்மதாவுக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். எஸ்.பி ராஜசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
புகார் தொடர்பாக விசாரணை நடத்தி, அதன் உண்மைத்தன்மை குறித்து பரிந்துரைக்க மட்டுமே மனித உரிமைகள் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் இந்த வழக்கில் மனித உரிமைகள் ஆணையம் என்னிடம் இருந்து இழப்பீடு கோரியுள்ளது. இது சட்டத்துக்கு புறம்பானது. எனவே சார்பு ஆய்வாளர் நர்மதாவுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, மனுவுக்கு தமிழக உள்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT