தமிழ்நாடு

கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி கோரிய மனு: நாளைக்கு ஒத்திவைப்பு

DIN

கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரிய போலீசின் மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கும் விதமாகப் பேசியதாக முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான நடிகர் கருணாஸ் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டார். தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அவர் ஞாயிற்றுக்கிழமை மாலையே வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். 

இந்நிலையில் கருணாஸை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கருணாஸின் ஜாமீன் மனுவுடன் சேர்த்து போலீசின் மனுவும் நாளை விசாரிக்கப்படும் எனவும் அதில் தெரிவித்துள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT