தமிழ்நாடு

நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்: ஆட்சியர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார்

DIN

நாகையில் வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி நாகை மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி  நாகை மாவட்ட ஆட்சியரும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலருமான சீ.சுரேஷ்குமார் வழிகாட்டுதலின்படி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வாக்காளர் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் சீ. சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிய்ல் அரசுஅதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் நாகை அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்று கையெழுத்திட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  நாகை மாவட்ட வருவாய் அலுவலர் மு. இந்துமதி மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு வெடிபொருள்கள்! கப்பலை நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு!

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

SCROLL FOR NEXT