தமிழ்நாடு

வாக்குச்சாவடியில் என்ன நடக்கும்? என்று பேசிய அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய திருப்போரூர்  தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

DIN

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி மீது வழக்குப் பதிவு செய்ய திருப்போரூர்  தேர்தல் அலுவலருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருப்போரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது மற்றும் கள்ள ஓட்டுகள் போடுவதைத் தூண்டும் வகையில் பேசியதாக அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு ஆகியோருக்கு திமுக வழக்குரைஞர் அணிச் செயலாளர் கிரிராஜன் வெள்ளிக்கிழமை அனுப்பிய புகார் மனுவில்:

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற பிரசாரக் கூட்டம் ஏப்ரல் 4-ஆம் தேதி நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசும்போது, வாக்குச்சாவடியில் என்ன நடக்கப் போகிறது. நாம் மட்டுமே அங்கு இருக்கப் போகிறோம். அடுத்து என்ன... அதை நான் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமா, உங்களுக்குப் புரிந்திருக்குமே என்று கூறியுள்ளார். அன்புமணியின் இந்தப் பேச்சு, வாக்குச்சாவடிகளை அவர்கள் தேர்தல் நெறிமுறைகளை மீறி, குற்ற நடவடிக்கைகளின் மூலம் கைப்பற்றப் போவதைக் காட்டுகிறது. வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி 3 ஆண்டுகள் பிணை கிடைக்காத தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுவது குறித்துப் பேசியுள்ள அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அனைத்து மக்களவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளிலும், சட்டப்பேரவைத் இடைத்தேர்தல் நடைபெறும் 18 தொகுதிகளின் வாக்குச்சாவடிகளிலும் போதுமான துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் மக்களவைத் தொகுதிகளான தருமபுரி, விழுப்புரம், மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், கடலூர், திண்டுக்கல் மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளான பூந்தமல்லி, சோளிங்கர், குடியாத்தம், திருப்போரூர், ஆம்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகியவற்றின் வாக்குச்சாவடிகளிலும் நேர்மையாகத் தேர்தல் நடத்த துணை ராணுவப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

மேலும், கட்சி முகவர்களிடம் கட்டாயம் அடையாள அட்டையைப் பரிசோதித்து வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கவும், தேவையில்லாத நபர்களை வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்காமல் இருக்கவும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேரே இஷ்க் மெய்ன் டிரெய்லர்!

பிகார் பேரவைத் தேர்தல் வெற்றி நிலவரம்!

“அரசு சரியாக, தீவிரமாக ஆய்வு செய்யவில்லை!” மேகதாது விவகாரம் பற்றி ஓபிஎஸ்!

காமாட்சி அம்மன் அவதார தினம்: கோயில் ஊழியா்கள் பால் குட ஊா்வலம்

‘பாலியல் ரீதியாக, தவறான எண்ணத்தில் யாரேனும் முயற்சித்தால் உடனே பெற்றோா், ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும்’

SCROLL FOR NEXT