தமிழ்நாடு

ஸ்டாலின் முன்மொழிந்ததை அவரது நண்பர்களே விரும்பவில்லை: பிரதமர் மோடி பேச்சு

நாட்டின் காவலாளியாக நான் விழிப்போடு இருக்கிறேன், யாரும் உங்களை ஏமாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

PTI


தேனி: நாட்டின் காவலாளியாக நான் விழிப்போடு இருக்கிறேன், யாரும் உங்களை ஏமாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தேனியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, காங்கிரஸ் ஆட்சியில் இருந்த 60 ஆண்டுகளில் மக்களுக்கு செய்தது அநியாயமும், அநீதியும்தான். வாரிசு அரசியல், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

புதிய இந்தியாவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். அதில் ராணுவ வீரர்கள் முதல் விவசாயிகள் வரை ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பும், வளமும் உள்ள இந்தியாவாக உருவாக்குவோம்.

நாளை நமதே, நாற்பதும் நமதே என்று தேனியில் பிரதமர் மோடி கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஸ்டாலின் மட்டுமே பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால், ஸ்டாலின் முன்மொழிந்ததை அந்த கூட்டணியில் உள்ளவர்களே விரும்பவில்லை.

கங்கையைப் போல் வைகை ஆற்றையும் தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் ஆட்சியில் போபால் விஷவாயு காசிவால் உயிரிழந்தவர்களுக்கு யார் நியாயம் வழங்குவது? என்று மோடி பேசினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மானாமதுரையில் இன்று மின் தடை

சிறுநீரக மோசடி: தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

பஜாஜ் ஃபைனான்ஸ் கடனளிப்பு 27% உயா்வு

அக்டோபரில் 5 மாத உச்சம் தொட்ட பெட்ரோல் விற்பனை

பந்தன் வங்கியின் வருவாய் ரூ.1,310 கோடியாகச் சரிவு

SCROLL FOR NEXT