தமிழ்நாடு

அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன்

DIN


சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நடைபெற்ற சோதனை தொடர்பாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 

சென்னை சேப்பாகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறையில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணிக்கு சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் 2 மணி நேரம் வரை நீடித்தது. 

பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த சோதனை நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனை குறித்து வருமான வரித்துறையினர் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சோதனையில் பணம், ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்தும் தகவல் எதுவும் இல்லை. 

இந்நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியில் நேற்று நடைபெற்ற சோதனை தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு வருமான வரித்துறையினர் இன்று சம்மன் அனுப்பியுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT