தமிழ்நாடு

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை

DIN

கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 

தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், ஜூன் 2 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஜூன் 3 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் தொடங்கவிருக்கிறது. 

பள்ளி திறந்த முதல் நாளில் மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடைகள், நோட்டுகள் வழங்கப்படும் எனவும் கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கோடை விடுமுறையில் அரசுப் பள்ளி ஆசிரியர் அனைவரும் பணிக்கு வர வேண்டும் என்றும் அலுவலக நேரத்தில் காரணமின்றி பள்ளிக்கு வராமல் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT