தமிழ்நாடு

மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் முறையீடு

DIN

மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் முறையீடு செய்துள்ளார். 

மதுரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சனிக்கிழமை பெண் அதிகாரி உள்பட 4 பேர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குச் சென்று அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வேட்பாளர் சு.வெங்கடேசன் முறையீடு செய்துள்ளார். 

அப்போது இதனை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் உறுதியளித்தது. இதையடுத்து அவர் தனது கோரிக்கையை மனுவாக விரைவில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT