தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

DIN

புயல் எச்சரிக்கையை மீறி சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் கடற்கரையில் குவிந்தனர்.
"பானி' புயலால் தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என அறிவிக்கப்பட்ட போதிலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் மே 1-ஆம் தேதி வரை கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது. 
இந்நிலையில் சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கும் மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது. 
மேலும், கோடை விடுமுறையால் சிறுவர், சிறுமியர் குடும்பத்துடன் வந்தவண்ணம் உள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையிலும், சுற்றுலாப் பயணிகள் கடலில் இறங்கி குளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT