தமிழ்நாடு

45.72 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

DIN

தமிழகத்தில் இதுவரை  மாணவர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என 45.72 லட்சம்  பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 
 இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் இதுவரை 45 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு  விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. மடிக்கணினிகள் பெறாதவர்களுக்கு நிகழாண்டில் மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. விரைவில் டேப் எனப்படும் கையடக்க கணினிகள் வழங்கும் பணிகளும் நிறைவேற்றப்படவுள்ளன.  அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிப்படியாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் தொடக்கப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக்  வருகைப்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்படும்  என அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை

வீரகனூா் ஸ்ரீராகவேந்திரா பள்ளி பிளஸ் 2 தோ்வில் சாதனை

உலக ஆஸ்துமா தினம் கடைப்பிடிப்பு

ஆத்தூா் அறிவுசாா் மையத்தில் மாணவா்கள் பயில நூல்கள் வசதி

வாழப்பாடியில் ரூ. 7.32 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

SCROLL FOR NEXT