தமிழ்நாடு

திருடர்களுடன் போராடிய நெல்லை தம்பதியை அஜித், விஜய் படத்தலைப்புகளால் பாராட்டித் தள்ளிய கிரிக்கெட் பிரபலம் 

முகமூடித்  திருடர்களுடன் திருடனுடன் போராடிய நெல்லை தம்பதியை அஜித், விஜய் படத்தலைப்புகள் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

DIN

சென்னை: முகமூடித்  திருடர்களுடன் போராடிய நெல்லை தம்பதியை அஜித், விஜய் படத்தலைப்புகள் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் பாராட்டியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (72). இவர் தனது மனைவி செந்தாமரையுடன் (65) பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இத்தம்பதி ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி திருடர்களிடம் கடுமையாகப் போராடிய நிகழ்வு வலைதளங்களில் வைரலாகப் பரவியது.  

இச்சம்பவத்தில், செந்தாமரை அணிந்திருந்த 37 கிராம் தங்கத் சங்கிலியைப் பறித்துக்கொண்டு திருடர்கள் தப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் அவர்களது போராட்டம் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில் முகமூடித்  திருடர்களுடன் போராடிய நெல்லை தம்பதியை அஜித், விஜய படத்தலைப்புகள் மூலம் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்; சுழற்பந்து வீச்சாளரும், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை. Hats-off to the elderly couples of Thirunelveli who fought with  Robbers

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

தமிழ் மண்ணில் அடிமைத்தனத்தை வீழ்த்துவோம்: உதயநிதிஸ்டாலின்

கூலி டிரெய்லர்!

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

SCROLL FOR NEXT