சென்னை மெட்ரோவில் இன்று இலவசப் பயணம்
சென்னை மெட்ரோ ரயிலில் சனிக்கிழமை காலை முதல் பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை மெட்ரோ ரயிலில் சனிக்கிழமை காலை பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் மற்றும் தகவல் பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் சனிக்கிழமை காலை முதல் ஏற்பட்ட கோளாறு காரணமாக அனைத்து மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் அனைவரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து விமான நிலையம், வண்ணாரப்பேட்டை மற்றும் அரசினர் தோட்டம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இப்பழுதை சீர்செய்யும் பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.