கோப்புப்படம் 
தமிழ்நாடு

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளார்.

DIN


சென்னை: அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் அடுத்த 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் என அனைத்து விதமான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க வலியுறுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

தொழில் நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மையத்தை அமைக்க 6 மாத காலம் அவகாசம் கேட்ட நிலையில், தமிழக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT