தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகச் சரிவு

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாகச் சரிந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தாலும்,  கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மழை குறைந்ததாலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து சரிந்தது.
கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டது. 
உபரிநீர் குறைக்கப்பட்டதால்,  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை விநாடிக்கு 12,000 கன அடியாகச் சரிந்தது. 
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10,000 கன அடி நீரும்,  கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.  
அணையின் நீர்மட்டம் 116.43 அடியாகவும்,  நீர் இருப்பு 87.89 டி.எம்.சி. யாகவும் இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

பேஸ்பாலாக மாறிவரும் கிரிக்கெட்: சாம் கரண் நெகிழ்ச்சி!

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

SCROLL FOR NEXT