தமிழ்நாடு

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது: கவிஞர் வைரமுத்து

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

DIN

ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட அதிகாரம், ஜனநாயகம் இதை ரசிக்காது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், தில்லியில் சிபிஐ அதிகாரிகளால் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.  

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, அவர் தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் மூலம் உடனடியாக தடை பெறுவதற்கான முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில், ப.சிதம்பரம் கைதாகியுள்ளார். 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டரில்,
ப.சிதம்பரம் கைது என்பது அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அதிகாரம்; ஜனநாயகம் இதை ரசிக்காது. வழக்கை அவர்  சட்டப்படி எதிர்கொண்டு விட்டு விடுதலையாவார் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குளிர்கால சருமப் பராமரிப்பு டிப்ஸ்!

மீண்டும் தனுஷுடன் இணைந்த சாய் பல்லவி!

விஜய் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான்! - நயினார் நாகேந்திரன் பதில்

டி20 உலகக் கோப்பை 2026: 20 அணிகளின் வீரர்கள் விவரம்!

சிறுசேரி சிப்காட் சுற்றுச்சூழல் பூங்கா: முதல்வர் திறப்பு!

SCROLL FOR NEXT