தமிழ்நாடு

சென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரிய கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு

DIN


சென்னை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகி ஒய்.வி. சுப்பா ரெட்டி நேற்று தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, தமிழகத்தில் இருந்து திருப்பதி வரும் பக்தர்களின் வசதிக்காக, சென்னையிலேயே, மிகப்பெரிய திருப்பதியைப் போன்ற ஏழுமலையான் கோயிலைக் கட்ட தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாகவும், திருப்பதிக்கு தமிழகத்தில் இருந்துதான் ஏராளமான பக்தர்கள் வருவதால் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியிடம் ஆலோசனை நடத்திய பிறகு, சென்னையில் திருப்பதியைப் போன்ற மிகப்பெரியக் கோயிலைக் கட்டுவதற்கான பணியை திருப்பதி தேவஸ்தானம் துவக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இதுபோல கன்னியாகுமரியிலும் திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதேப்போன்று சென்னையிலும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியுடன், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தி நிலத்தை ஒதுக்குவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே இது குறித்து பேச்சுவார்த்தை நடந்த போது சென்னையில் அதற்கான நிலத்தை ஒதுக்கி தருவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். ஆனால் அப்போது அதனை செயல்படுத்த முடியாமல் போனது. ஆனால் இப்போது சென்னையில் அவ்வளவு பெரிய நிலம் கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய தலைவர் கிருஷ்ணா ராவ் கூறினார்.

விஐபி டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபிக்களின் பிரிவுகளை ஒன்றாக மாற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு மணி நேரமும் 6 முதல் 7 ஆயிரம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துச் செல்கிறார்கள். பக்தர்களுக்குத்தான் அனைத்து விதத்திலும் முன்னுரிமை வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT