முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று யாரெல்லாம் குடை எடுத்துச் செல்ல வேண்டும்? 

தமிழகத்தில் இன்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று போல ஒரு மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:57 AM
பகிர்:


தமிழகத்தில் இன்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று போல ஒரு மழையை எதிர்பார்க்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

யாரும் எதிர்பாராத வகையில் நேற்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் பரவலாக மழை பெய்து மக்களை மகிழ்வித்தது.

இந்த நிலையில் இன்றைய மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருப்பதாவது, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்றைப் போல இன்றும் மழையை எதிர்பார்க்கலாம்.

மேலும், சிவகங்கை - புதுக்கோட்டை, தஞ்சாவூர் டெல்டா பகுதி, சேலம் பகுதிகளுக்கும் மழை வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், ஈரோடு, பெரம்பலூர் -  அரியலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கும் மழை பெய்யும் சூழ்நிலை சிறப்பாக உள்ளது.

ஒரு விஷயத்தை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும். நேற்றைப் போல தமிழகத்தில் பரவலாக ஒரு பலத்த மழையை யாரும் எதிர்பார்க்க வேண்டும். தினமும் அதுபோல பெய்ய வாய்ப்பில்லை. நேற்று கூட காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யவில்லை. ஒரு சில பகுதிகளில்தான் மழை பெய்துள்ளது. மேற்கண்ட மாவட்டங்களுக்கும் இதே நிலைதான் இன்னும். அதுவும் மேகக் கூட்டங்கள் உருவாவதைப் பொருத்தே அதை உறுதியாகக் கூற முடியும். ஆனால் தற்போதைக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதை மட்டுமே உறுதி செய்ய முடியும்.

சேலத்தில் மழை பெய்தால் பெங்களூருவிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

ஆந்திராவின் சித்தூர் - நெல்லூர் பகுதிகளிலும் மழை பெய்யலாம். 

கேரளாவில் அடுத்த 4 - 5 நாட்களுக்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பில்லை என்று நிம்மதி அடையலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக மழை பெய்யும்.

காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெய்த மழையின் அளவு..

திருவள்ளூர் - 36 மி.மீ.
சோழவரம் ஏரி - 31 மி.மீ.
அம்பத்தூர் - 25 மி.மீ.
பாரிஸ், ஸ்ரீபெரும்புதூர், மாதவரம், நுங்கம்பாக்கம்  - 11 மி.மீ.
அண்ணா பல்கலை  - 10 மி.மீ. என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.