தமிழ்நாடு

பழனி பஞ்சாமிர்த விற்பனை கடைகளில் 2-ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை

DIN


 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பஞ்சாமிர்தம் விற்பனைக் கடைகளில் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  
பழனி அடிவாரம் பகுதியில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி விற்பனை செய்யும் கடைகளில் வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வருமானவரித் துறை மற்றும் வருமானவரி புலனாய்வுத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு வரை நீடித்த சோதனை, வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. கடைகளில் மட்டுமின்றி,  சார்பு நிறுவனங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.  இந்த சோதனையில் சென்னை, கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட  ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில், சோதனை மேலும் 2 நாள்கள் தொடரும் என வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT