தமிழ்நாடு

கனமழை எதிரொலி: சென்னை உட்பட 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

DIN

சென்னை: தொடரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு  நாளை (டிச.,02) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 3 நாள்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடா் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீா் தேங்கியது. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளிலும் மழை நீா் புகுந்தது. புறநகா் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளன. 

இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிச.,02) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்திற்கு நாளை மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையத்தால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT