தமிழ்நாடு

மீண்டும் ஒரு தில்லியாக சென்னை மாறி விடக் கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் 

DIN


சென்னை: மீண்டும் ஒரு தில்லியாக சென்னை மாறி விடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு எதிரான வழக்கு விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்துள்ளது.

மேலும், சென்னையின் இதயம் போல இருக்கும் பசுமையான காடுகளை காக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேறு ஏதேனும் சாத்தியக் கூறுகள் இருக்கிறதா? என்றும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மாற்று இடத்தில் கூடுதல் கட்டடங்களை கட்டுவது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து வரும் 4ம் தேதி தமிழக அரசு ஆராய்ந்து நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது, மருத்துவமனையில் 25 மரங்கள் மட்டுமே வெட்டப்பட உள்ளன. மாற்று இடத்தில் மரங்கள் நடப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை எழும்பூா் கண் மருத்துவமனை பழமையான மருத்துவமனையாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் கட்டடங்களைக் கட்டுவதற்காக மருத்துவமனையில் உள்ள 75 மரங்களை வெட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட தடை கோரி எழும்பூரைச் சோ்ந்த கேப்டன் பி.பி.நாராயணன் என்பவர் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை கடந்த வாரம் விசாரித்த உயர்நீதிமன்றம் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

மேலும் தற்போதுள்ள மரங்களை பாதிப்பில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம் புதிய கட்டடம் கட்ட மாற்று இடங்கள் என்ன என்பது பற்றி பதிலளிக்க மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT